41 வயதில் 500 குழந்தைகள்; கதறும் தாய் - மிரண்ட நீதிமன்றம்!
தனது மகனின் விந்தணு தானம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தாய் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
விந்தணு தானம்
நெதர்லாந்தில் உள்ள DonorKind என்ற அறக்கட்டளை குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுகிறது. விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஜொனதன் என்ற நபர் ஒருவர் உதவி வருகிறார்.
தனது 41 வயதில் 500 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். இவர் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டுப் பெண்களுக்கும் டோனராக உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரின் விந்தணு தானம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயார் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தாய் கடும் எதிர்ப்பு
காதார வழிகாட்டுதல்களின்படி, விந்து தானம் செய்கிற ஒருவர் அதிகபட்சமாக 25 குழந்தைகளுக்குத் தந்தையாக முடியும். ஆனால், அதற்கு மேல் செய்தாலும், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியாது.
ஆனால் அந்தப் பெண், இளைஞர்களின் இந்தச் செயலால், பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றும், மனநலம் சரியில்லாமலும் பிறக்கும் போக்கு அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜொனதன் மீதான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. முன்னதாக, 2017ஆம் ஆண்டில் டச்சு சொசைட்டி ஆஃப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.