சினிமாவில் நடிக்க மாட்டேன்; எனக்கு அந்த ஆசை இருக்கு - நடிகை துஷாரா பளீச்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
35 வயதிற்கு மேல் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.
துஷாரா விஜயன்
‘போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலும், தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்திலும் நாயகியாக துஷாரா நடித்துள்ளார். கடந்த வாரம் ராயன் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.
நடிக்க மாட்டேன்
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய துஷாரா ” என்னுடைய 35 வயதிற்கு மேல் நான் சினிமாவில் இருந்து விலகி விடுவேன். அதற்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். 35 வயதிற்கு மேல் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் 50-வது படமாக உருவாகியிருக்கும் 'ராயன்' வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் தங்கையாக துஷார விஜயன் நடித்துள்ளார்.