அதிமுக மாநிலங்களவை எம்.பி முகம்மது ஜான் திடீர் மரணம்
election
dead
aiadmk
mohammed
By Jon
அதிமுக மாநிலவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதிமுக கட்சியின் மாநிலவை எம்.பி. முகமது ஜான்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் உயிரிழந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் எம்.பி. முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவரின் மறைவிற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.