ரஜினி வீட்டில் கூடிய பிரபலங்கள் - துர்கா ஸ்டாலின் முதல் நடிகை மீனா வரை!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
நவராத்திரி வழிபாடு
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் ஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
அத்துடன் ஏராளமான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ஒன்று கூடினர்.
பிரபலங்கள் பங்கேற்பு
மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை லதா, மீனா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வருகை தந்தனர்.
நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் குடும்பத்துடன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளதால், இந்த நவராத்திரியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.