மனைவியிடம் கோபப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - என்ன நடந்தது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவரது மனைவி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
என்னதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கடவுள் பக்தி உள்ளவர் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று.அவர் முதல்வராக வர வேண்டி துர்கா ஸ்டாலின் பல கோவில்களில் பிரார்த்தனை நடத்தியது பல விவாதங்களை கிளப்பியது.
சில தினங்களுக்கு முன் துர்கா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் குடும்ப விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவிக்கு விழா மேடையில் வாழ்த்துச் சொல்லி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனிடையே மு.க.ஸ்டாலின் குறித்து அவரது மனைவி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள துர்கா ஸ்டாலின், தங்களுக்கு சினிமா பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்றும், திருமணமான புதிதில் அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் நைட் ஷோ செல்லும் போது சென்னையில் பிரபலமான ஹோட்டலில் நள்ளிரவில் ஃபலூடா வாங்கி தருவாங்க. ஆனால் எனக்கோ தூக்க கலக்கத்தில் இருப்பதால் வேண்டாம் என மறுப்பேன். அதற்கு செல்லமாக கோபித்துக் கொள்வார். நான் ஆசையா வாங்கி தாரேன் சாப்பிட மாட்டியா என கேட்பார் என துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.