என் பொது வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகம்: சைதை துரைசாமி
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக - திமுக 130க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக போட்டியிடுகின்றன. அதில் போடி, தொண்டாமுத்தூர், கரூர் மற்றும் சைதாப்பேட்டை நட்சத்திர தொகுதிகளாக விளங்குகின்றன.
சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி மற்றும் மா.சுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருமே முன்னாள் சென்னை மேயர்கள் என்பதும் சுவாரஸ்யமானது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை துரைசாமி நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என மா.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார், அதற்கு துரைசாமி தற்போது பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த துரைசாமி பேசுகையில், “என் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன். போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை அபகரிப்பதற்கு மேயர் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் மா.சுப்ரமணியன் ஒரு அரசியல்வாதியாக இருக்கும் அவர் தொழிலாளர் குடியிருப்பில் மேல் கூரையை கட்டினேன் என்பது எவ்வாறு முடியும்.
அது சிட்கோவின் சொத்து. பொது ஆவணங்களை போலியாக தயாரித்தான் அதற்கு 7 வருடம் தண்டனை. இப்படி 23 வருடம் தண்டனை கிடைக்கும் அளவிற்கு அவர் மீது வழக்கு உள்ளது திருவண்ணாமலையில் எனக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் எனக்கு இருப்பதோ 40 ஏக்கர் மட்டுமே.
மேலும் என் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்க பட்டாலும் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் பொது வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகம், மனதரிந்து எந்த ஒரு தவறும் செய்ய கூடாது என்று இருப்பவன். என்னுடைய பொது வாழ்க்கை நேர்மையானது. என் மீது ஒரு குற்றமாவது சொல்லுங்கள் பார்க்கலாம். சைதபேட்டையில் என்னை எதிர்த்து மா. சுப்ரமணியன் எந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்?. வருமான வரி ஏய்ப்பு நான் செய்யவில்லை.
பதவி காலத்தில் எந்த அரசியல்வாதியாவது சொத்தை விற்பார்களா, நான் செய்தேன். ஏழை மனவர்களின் கல்விக்காக செய்தேன். நான் உழைத்து சம்பாரித்த பணத்தை இந்த மக்களுக்காக செலவு செய்தேன்.” என்றார்.