தேர்தலில் எனது நண்பர்கள் பணத்திற்கு விலை போயிட்டார்கள் - ஆடியோ பதிவோடு உண்மையை வெளியிட்ட துரைமுருகன்! சர்ச்சை!
இந்த சட்டமன்ற தேர்தலில் என்னுடன் இருந்த நண்பர்கள் பணத்திற்கு விலை போய் விட்டார்கள் என்றும் யார் யாரிடம் பணம் பெற்றார்கள் என்ற தொலைபேசி பதிவு என்னிடம் உள்ளது என கூறிய அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி ஒன்றிய திமுக கிழக்கு கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட நான் தபால் வாக்கு மூலமாக மட்டுமே வெற்றி பெற்றேன் என்றும், இந்த தேர்தலின் போது என்னுடன் இருந்த நண்பர்கள் பலபேர் பணத்திற்கு விலை போய் விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், யார் யார் பணம் பெற்றவர்கள், யார் யாரிடம் பணம் பெற்றவர்கள் என்ற தொலைபேசி பதிவுகள் என்னிடம் உள்ளது என்றும் மேடையிலேயே கூறியுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.