என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர் : அமைச்சர் துரைமுருகன் பேச்சால் திமுகவில் சலசலப்பு
தன்னை வாழவைத்த தெய்வம் எம்.ஜி.ஆர் வாய்ப்புக்காக ஓடுபவன் நாய்க்கு சமமாவன் என துரைமுருகன் பேசியுள்ளது திமுக கட்சியினரிடயே புயலை கிளப்பியுள்ளது.
அன்பழகன் நூற்றாண்டு விழா :
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் ,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனக்கும் எம்,ஜியாருக்குமான உறவு குறித்து பேசினார்.
தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான நெருக்கம் பற்றி பேசினார். தன்னை அதிமுகவுக்கு வருமாறு எம்.ஜி.ஆரே நேரில் அழைத்ததாகவும் ஆனால் ''என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக'' என அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிட்டு தாம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
வாழவைத்த தெய்வம் எம்ஜிஆர்
அதே சமயம் தன்னை வாழவைத்த தெய்வம் எம்ஜிஆர்தான் என்று கூறிய துரைமுருகன் , வாய்ப்பு கிடைக்கின்றது என்பதற்காக ஓடுபவன் எச்சில் இலையினை சாப்பிடும் நாய்க்கு சமமானவன் எனக் கூறினார்.
குழப்பத்தில் திமுக
துரைமுருகனின் இந்த பேச்சு திமுக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது, குறிப்பாக தற்போது தமிழகத்தில் முக்கியதுறைகளில் அமைச்சர்களாக உள்ள ராஜகண்ணப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, முத்துசாமி, என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த பலரும் முக்கிய அமைச்சர்களாக பதவி வகித்து வரும் நிலையில் .
திமுகவின் மூத்த முக்கிய நபரும் அமைச்சருமான துரைமுருகனின் இத்தகைய பேச்சு திமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.