கேப்டன் மில்லர் படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் துரைமுருகன்

DMK Durai Murugan
By Irumporai May 08, 2023 11:00 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நீர்நிலைகளில் நடைபெற்றது.

கேப்டன் மில்லர் படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் துரைமுருகன் | Duraimurugan Says About Captain Miller Movie

    துரைமுருகன் கருத்து

இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து உரிய விசாரணை எடுக்கப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.