மேகதாது அணை விவகாரம்: டிகே சிவகுமாருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

By Irumporai May 31, 2023 09:24 AM GMT
Report

மேகதாது அணை விவகாரத்தில் டிகே சிவகுமாருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிகே சிவக்குமார்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் துணை முதலமைச்சராகவும் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்ற டி.கே. சிவக்குமார் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் எங்கள் வாக்குறுதிகளில் ஒன்று மேகதாது அணை கட்டுவது என்பதால் அதை நிறைவேற்றிய தீருவோம் என்று தெரிவித்தார்.

மேலும் விரைவில் டெல்லி சென்று அதற்கான அனுமதிக்கும் பெறுவோம் என்று அவர் கூறியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

மேகதாது அணை விவகாரம்: டிகே சிவகுமாருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் | Duraimurugan Megadhadhu Dam And Tk Sivakumar

துரைமுருகன் கருத்து

இந்த நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, கர்நாடகாவுக்கு அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். கர்நாடக துணை முதல்வர் பதவி ஏற்றவுடன் தனது பொறுப்பான பணிகளை டிகே சிவகுமார் செய்வார் என்று நினைத்தோம்.

ஆனால் அவர் மேகதாது அணை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.