சிங்கப்பூர் பறந்த துரைமுருகன்; முதல்வர் இல்லாத நேரம் - வெடித்த சர்ச்சை!
அமைச்சர் துரைமுருகன் திடீரென சிங்கப்பூர் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் 'பார்முலா - 4' கார் பந்தயம் நடந்து வரும் நிலையில், அதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மூத்த அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளார். முதல்வர் அமெரிக்காவில் உள்ள நிலையில், அரசு மற்றும் கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டிய மூத்த அமைச்சர், சொந்த பயணம் காரணமாக சிங்கப்பூர் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் பயணம்
இதுதொடர்பாக துரைமுருகன் பேசுகையில், அமைச்சர் துரைமுருகனுக்கு இதயம் தொடர்பான பிரச்னை உள்ளது. அதனால், தன் நண்பரும், மருத்துவருமான சிங்கப்பூரில் இருக்கும் ஜெயராமனை சந்தித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற திட்டமிட்டார்.
ஆனால், கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால், துரைமுருகனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சிங்கப்பூருக்கு செல்ல முடியவில்லை.
எனவே, இது தொடர்பாக, முதல்வர் அமெரிக்கா புறப்படும் முன் துரைமுருகன் சிங்கப்பூர் செல்லவிருப்பதை முதல்வரிடம் குஊறி அனுமதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.