நாளை துவங்கும் மகளிர் உரிமை திட்டம் ...கட்சியினருக்கு அதிரடியாக உத்தரவிட்ட துரைமுருகன்..!!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க நாளில் மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
நாளை மகளிர் உரிமை தொகை
திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியான "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" நாளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கின்றார். இதற்காக பெறப்பட்ட 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என்ன காரணம்? என்பதையும், மறுபடியும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சி சாதனை மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் திமுகவினருக்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
துரைமுருகன் அறிவுறுத்தல்
திமுக நிர்வாகிகளுடைய வீட்டில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் "கலைஞர் உரிமைத் தொகைக்கு நன்றி", உரிமைத் தொகை 1000" போன்ற வாசகங்களுடன் கோலம் போட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிமைத் தொகை குறித்தான சுவரொட்டிகளையும், பொது இடங்களில் மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.