ராமதாஸ் எப்படி இருக்கிறார்? நேரில் சென்று நலம் விசாரித்த துரை வைகோ!

Dr. S. Ramadoss Chennai
By Sumathi Oct 07, 2025 12:25 PM GMT
Report

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களின் உடல்நலம் விசாரித்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

durai vaiko meets ramadoss

மருத்துவமனையில் அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தேன். இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்தும் டாக்டர் ஐயா அவர்கள் கேட்டறிந்தார். தலைவர் வைகோ அவர்களின் மக்கள் பணியையும் அவரின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் பெருமையோடு குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார்.

தங்களைப் பற்றியும் தலைவர் வைகோ அவர்கள் மிக உயர்வாக குறிப்பிடுவார் என்று நான் கூறினேன். டாக்டர் ஐயா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் எப்படி இருக்கிறார்? நேரில் சென்று நலம் விசாரித்த துரை வைகோ! | Durai Vaiko Visit Hospital Ramadoss Admit

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அண்ணன் ஜி.கே.மணி அவர்கள், டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களின் மூத்த மகள் திருமதி ஸ்ரீகாந்தி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் இனிய சகோதரர் அருள் அவர்கள், அன்பு சகோதரர் ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.