சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு!
16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு வந்த மற்ற முக்கிய கருப்பு மையங்களான (Black Spots) சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளிலும் Vehicular Underpass அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 14.03.2026 அன்று நான்கு திட்டங்களுக்கும் சேர்த்து சுமார் ₹ 205 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரியுள்ளது.

இது தொடர்பாக கடந்த 10.11.2025 அன்று இந்த திட்டத்தின் நிலை தொடர்பாக தகவல் அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் 24.11.2025 அன்று எனக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கொடுக்கப்பட்ட தகவலில் திட்டம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டும் திட்ட மதிப்பீடு உட்பட அனைத்தும் முடிக்கப்பட்டு டெண்டர் நடைமுறை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 24.01.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும், 06.02.2026 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதங்களாக இந்த நிலையே நீடிப்பதாக எடுத்துக் கூறி டெண்டர் அறிவிப்பை விரைவு படுத்தி வெளியிட கேட்டு கொண்டேன். அதை தொடர்ந்து தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
G Corner மட்டும் அல்லாது, சஞ்சீவி நகர், Y Junction மற்றும் மாருதி நகர் பகுதிகளில் நீண்டநாளாக நிலவி வந்த போக்குவரத்து பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு முறையும் மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இத்துறையின் மாண்புமிகு இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!
— Durai Vaiko (@duraivaikooffl) March 19, 2026
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 38ல், G Corner மட்டுமல்லாமல் இதே சாலையில், பல உயிர் பலிகள் ஏற்பட்டு… pic.twitter.com/OC8N3iJX1e
எனது இந்த தொடர் முயற்சியின் பலனாக இந்த முக்கிய முன்னேற்றத்தை பார்க்கிறேன். மாண்புமிகு அமைச்சர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சி மக்கள் என் மக்கள். அவர்களின் பாதுகாப்பும் நலனும் எனது முதன்மை பொறுப்பு.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.03.2026