வட மாநில தொழிலாளர்களின் சிக்கலுக்கு காரணம் பாஜக தான் - துரை வைகோ காட்டம்

Tamil nadu BJP
By Sumathi Mar 06, 2023 08:47 AM GMT
Report

வட மாநில தொழிலாளர்கள் குறித்த பிரச்சினைகளுக்கு காரணம் பாஜக தான் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ

தமிழ்நாட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்து வருகின்ற வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களின் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தி தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு செய்து வருகின்றன.

வட மாநில தொழிலாளர்களின் சிக்கலுக்கு காரணம் பாஜக தான் - துரை வைகோ காட்டம் | Durai Vaiko Bjp Reason Problems Of North Indian

இது போன்ற வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தான் காரணம்

இதுகுறித்து அவர் ”புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து செய்திகள் மற்றும் வதந்திகள் போன்றவை வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். இந்த மாதிரி வதந்திகளை பரப்பி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும், வட இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

வட மாநில தொழிலாளர்கள் குறித்த பிரச்சிணைகளுக்கு முக்கிய காரணம் பாஜகதான். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தான் காரணம் என்று பேசி வருகிறார். அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே அண்ணாமலை இவ்வாறு பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.