ஒரு எம்.எல்.ஏ.க்கு ரூ.40 கோடி பேரம் பேசும் திமுக - துரை வைகோ குற்றச்சாட்டு
durai vaiko accuse dmk ready to give 40 crores per mla for topple govt: ஆட்சியை கலைக்க ஒரு எம்.எல்.ஏ.க்கு ரூ.40 கோடி வரை திமுக பேரம் பேசுவதாக மதிமுக எம்பி துரை வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு எம்.எல்.ஏ.க்கு ரூ.40 கோடி
மதிமுக எம்பி துரை வைகோ, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மறைமுக கூட்டணியை உருவாக்க முயன்றவர் இன்றைய திமுக தலைவர். ஆனால் அது நடக்கவில்லை.

அதன் பின்னர் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டார்கள். 3 மாதத்தில் கவிழும் என கூறினார்கள். 6 மாதம் நீடிக்காது என சொன்னர்கள். ஆனால், 6 மாதங்கள் கடந்தும் ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.
20 கோடி, ரூ.30 கோடி, கடைசியாக நான் கேள்விப்பட்டது ஒரு எம்.எல்.ஏ.க்கு ரூ.40 கோடி வரை கொடுக்க தயார் என திமுக தலைமை ஆட்சியை கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குதிரை பேரம், கழுதை பேரத்தில் ஈடுபடுகிறது திமுக தலைமை
. தேர்தல் முடிந்த உடன் அதிமுக கூட ஒரு மறைமுக கூட்டணியை உருவாக்க பார்த்தார்கள், ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை. இப்போது அந்த மறைமுக முயற்சி, கூட்டணி நீடிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
உகண்டாவில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவாருங்கள்! சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் கடும் வாக்குவாதம் IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil