திமுக ஆட்சியில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் - திமுக பொது செயலாளர் துரைமுருகன்

hospital japan general Durai Murugan
By Jon Mar 28, 2021 02:58 AM GMT
Report

திமுக ஆட்சியில் பணம் இல்லாததால் ஜப்பான் நாட்டில் 2 ஆயிரம் கோடி கடன் வாங்கி காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை நிறைவேற்றினோம். காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் ரூ.15 ஆயிரம் கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைப்பேன் காங்கேயநல்லூர் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வாக்குகளை சேகரித்து வந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் திமுக காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் பேசுகையில், இந்த இடத்தில் வாரியார் சுவாமிக்கு மாலை அணிவித்து உங்கள் முன்னாள் வாக்குகளை கேட்கிறேன் 10 ஆண்டுகள் எடப்பாடி ஜெயலலிதா ஆட்சியில் எதையும் செய்யாத இருண்ட கால ஆட்சி நான் அமைச்சராக இருந்த போது பாலம் கட்ட அடிக்கல் நாட்டினேன்.

தேர்தலில் தோற்றோம் ஆனால் என்னை ஜெயிக்க வைத்தீர்கள் 10 ஆண்டுகள் அந்த திட்டம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லி 4 ஆண்டுகளாகியும் அதனை செய்யவில்லை திமுக ஆட்சியில் இருந்திருந்தால் பாலம் கட்டி பழைய பாலமாக இருந்திருக்கும் வாரியார் ஜெயந்தி அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

வாரியார் சுவாமிகள் உயிர் ஆகயத்தில் பிரிந்து அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது கருணாநிதி தான் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க முடியாது ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக திமுக ஆட்சியில் பணமில்லாததால் ஜப்பான் நாட்டிற்கு சென்று 2 ஆயிரம் கோடி கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றினோம் இந்த முறை நான் வெற்றி பெற்றால் 15 ஆயிரம் கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பேன் 2 ஆயிரம் ஏக்கரில் தொழில்பேட்டை அமைப்பேன் என்னை ஆதரியுங்கள் என்று பேசினார்.