15 ஆயிரம் கோடி செலவில் பல மாடி கட்டிடங்கள் கட்டப்படும் - துரைமுருகன் பேச்சு

election dmk aiadmk durai murugan
By Jon Mar 29, 2021 03:05 PM GMT
Report

80 ஏக்கர் சதுரத்தில் மல்டி ஸ்பெசலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 15 ஆயிரம் கோடி செலவில் பல மாடி கட்டிடங்கள் நூற்றுக்கணக்கான டாக்டர்கள் 80 ஏக்கர் சதுரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் காட்பாடி தொகுதிக்கு உருவாக்க வேண்டும் இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் வழங்கப்படும். காட்பாடியில் தேர்தல் பிரசாரத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்குகளை சேகரித்து பேச்சு.

வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகர் நேரு தெரு பகுதியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மீண்டும் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் வாக்குகளை சேகரித்து பேசுகையில், ஒரு திட்டம் என் நெஞ்சில் நீண்ட நாட்களாக இருப்பது நமக்கென்று எல்லா வசதிகளும் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி கிடையாது வேலூருக்கு போனால் சிஎம்சி பணம் மூட்டையாக கொண்டு போக வேண்டும்.

அடுக்கம்பாரை போனால் ஆல் வருவதே சந்தேகம் இதற்கிடையில் நம்முடைய தொகுதிக்கு என்று ஒரு பெரிய மருத்துவமனை 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல மாடிக் கட்டிடங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் டாக்டர்கள் 80 ஏக்கர் சதுரத்தில் அமையக்கூடிய கட்டிடங்கள் இப்படிப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஒன்று நம்முடைய தொகுதியில் தனியாக உருவாக்க வேண்டும் என்று எனக்கு நெடுநாள் ஆசை,அதிலே ஒரு கண்டிஷன் ஏற்றிருக்கிறேன் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட மருத்துவமனையை நம்முடைய தொகுதியில் சாதிக்க வேண்டும். இதுவரை சொன்னது செய்து இருக்கிறேன் இதையும் செய்வேன் என்று உங்களிடத்தில் நான் உறுதி அளிக்கிறேன்,அதேபோல் ஒரு தொழிற்பேட்டை ஒன்று அமைக்க வேண்டும் இந்த இரண்டு திட்டங்கள் நிறைவேற வேண்டும். இதுவரையில் நான் உங்களிடத்தில் சொல்லி துரைமுருகன் செய்யாமல் போய்விட்டார் என்ற பெயரை நான் பெற்றதில்லை ஒரு கருத்தை வாக்குறுதியை தருகிறேன் சொன்னால் ஆயிரம் முறை யோசிப்பேன்.

இது மக்களிடத்தில் போவது அதன் வாக்குறுதியாக தருவேன் எனவே இந்த வாக்குறுதிகளை தந்திருக்கிறேன் தயவுசெய்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் தொகுதி மேம்பாட்டுக்கு என்னோடு ஒத்துழைக்க உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பகுதியில் உள்ள இவ்வளவு நிகழ்ச்சிகளை அவ்வளவு ஏற்பாடு செய்த நம்முடைய தொகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் அன்பு அவர்கள் செய்திருந்தனர். முன்னதாக பிரச்சாரத்தின் போது ஏராளமான பெண்கள் பொதுமக்கள் ஆண்கள் என உற்சாகமாக வரவேற்றனர்.