தோல்வி பயத்தில் அதிமுக இதை செய்கிறது: வருமான வரித்துறை சோதனை குறித்து துரைமுருகன்
dmk
income tax
murugan
Tiruvannamalai
durai
By Jon
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடப்பதை கடுமையாக கண்டித்துள்ளார் திமுக பொதுச்செயலாளரான துரைமுருகன். எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி உட்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து பேசியுள்ள துரைமுருகன், வருமான வரித்துறையினரின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
தேர்தல் களத்தில் திமுக-வை வெல்ல முடியாது என்பதால் பாஜக-வை தூண்டிவிட்டு வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது அதிமுக அரசு.
வருமான வரித்துறை சோதனை நடந்தால் பயந்துவிடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது, இது அதிமுக-வின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என்றார்.