பொங்கல் பண்டிகைக்கு நகை வாங்க போறீங்களா? உஷாரா இருந்துகோங்க; போலி நகைகளை அக்மார்க் போல விற்பனை செய்யும் கும்பல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலி நகைகள் விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பலை பிடிக்க இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கங்களை வாங்குவது வழக்கமானதாகும். இந்த நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி ஆஃபர் முறையில் தங்க நகைகள் தரப்படுமென நகை கடைகள் அறிவிக்கின்றன.
நகை கடைகளில் ஆஃபர் நியாயமான முறையில் தரப்பாட்டலும் இந்த பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்க்கப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு போலி நகைகளை விற்க முயல்வதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரி மீணாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழு காலாவதியான லைசென்ஸ், போலி லைசென்ஸ் பயன்படுத்தி போலி நகைகளை அக்மார்க் நகைகள் போல, சட்ட விரோத முத்திரை இடும் பணிகளை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் இந்த அதிரடி ரெய்டில் 11 லட்சம் மதிப்பிலான தங்கம் மீட்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.