பிரம்மாண்டமான ஆஸ்கர் விருது : ஆறு விருதுகளை குவித்த திரைப்படம் எது தெரியுமா?
94வது ஆஸ்கர் விருது விழா இன்று தொடங்கியுள்ளது அமெரிக்க நேரப்படி மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாக ரெட்கார்ப்பெட் நிகழ்வுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி.கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதமே நடைபெற வேண்டிய ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சி சற்று தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,”DUNE” திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.குறிப்பாக,சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் “DUNE” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது
அதே சமயம்,சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
'Dune' kick-starts its winning run at Oscars 2022
— ANI Digital (@ani_digital) March 28, 2022
Read @ANI Story | https://t.co/CpX50e7MBh
#Dune #Oscars2022 pic.twitter.com/BpDWc0hZIP
அதே போல் சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை ENCANTO திரைப்படம் வென்றுள்ளது.
மேலும்,வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்த அரியானா டிபோஸ்-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் தேர்வாகியுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக டிராய் கோட்சூர் பெற்றுள்ளார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘என்காண்டோ’ வென்றுள்ளது.
மேலும்,தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.