பிரபல நடிகருக்கு கொரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
வளரும் இளம் நடிகரான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா 3வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிக அளவில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த கமல்ஹாசன், வடிவேலு, அருண் விஜய், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, மீனா, லதா மங்கேஷ்கர், சோனு நிகாம், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள துல்கர் சல்மான், “எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனோ பாசிட்டிவ் வந்துள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனால், நலமுடன் இருக்கிறேன். படப்பிடிப்பில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் துல்கர் சல்மானின் அப்பா நடிகர் மம்முட்டிக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Positive. pic.twitter.com/cv3OkQXybs
— Dulquer Salmaan (@dulQuer) January 20, 2022