பிரியாணியால் நடிகர் துல்கர் சல்மானுக்கு நேர்ந்த துயரம் - என்ன நடந்தது?

Dulquer Salmaan Biriyani
By Sumathi Nov 05, 2025 06:14 PM GMT
Report

நடிகர் துல்கர் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

நடிகர் துல்கர் சல்மான்

முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

dulquer salmaan

தொடர்ந்து  ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது.  இதற்கிடையில் இவர் வெளிநாடுகளிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த விவகாரத்தில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், அமலாக்கத் துறையினர் மற்றும் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

புதிய சிக்கல் 

இந்நிலையில், பிரபல அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். பத்தனம்திட்டாவில் நடந்த ஒரு திருமணத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அரிசியை பயன்படுத்தி சமைத்த பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு

தைரியமா காதலை சொன்னார்; ஓகே சொல்லிட்டேன் - மனம் திறந்த அனுஷ்கா!

தைரியமா காதலை சொன்னார்; ஓகே சொல்லிட்டேன் - மனம் திறந்த அனுஷ்கா!

வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் புகார் தரப்பட்டது. இது குறித்து விசாரிக்க, அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் ஆகியோர் நேரில் ஆஜராக நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.