டக்..டக்..டக்..மாராத்தான் போட்டியில் ஓடி பதக்கத்தை வென்ற வாத்து..! வைரலாகும் வீடியோ..

Viral Video
1 மாதம் முன்

மாராத்தான் போட்டியில் மனிதர்களுடன் சேர்ந்து குடு குடுவென ஓடி பதக்கத்தை வென்ற வாத்து ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் தண்டர் போல்டு என்பவர் 26 செகண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அந்த வீடியோவில் பெண்கள்,இளைஞர்கள்,சிறுவர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் பெண்ணுடன் சேர்ந்து வாத்து ஒன்று ஓடியது.அதில் வாத்து உடல்களை அசைத்தவாறு குடு குடுவென்று அனைவரையும் கவரும் படி ஓடியது. பின்னர் அந்த வாத்து வெற்றி இலக்கை அடைந்தவுடன்,

பெண் ஒருவர் போட்டியில் மூச்சு வாங்க ஓடி வந்த வாத்துக்கு கப் ஒன்றில் தண்ணீர் கொடுத்து உதவினார். இந்நிலையில் வாத்துக்கு நிகழ்ச்சி குழுவினர் பதக்கம் வழங்கி கௌவுரவப்படுத்தினர்.

மாராத்தான் போட்டியில் வாத்து க்யூட் ஆக ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது ட்விட்டரில் அந்த வீடியோ 235.9K பார்வையாளர்களை பெற்றுள்ளது. 

   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.