‘’ நம்ம தல சார் , சி.எஸ்.கே சார் ‘’ : சந்தோஷத்தில் தூபேவின் மனைவி
2022 ஐபிஎல் தொடருக்கு முன்னால், வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது.
இந்த மெகா ஏலத்தில் தற்போது சாம்பியனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேருடன் மேலும் மொத்தமாக 25 வீரர்களுடன் அணியை கட்டமைத்துள்ளது.
இந்த நிலையில் ,மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான சிவம் தூபேவை 4 கோடி ரூபாய்க்கு எடுத்தது சென்னை அணி. 50 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயித்து கொண்டு களத்தில் இறங்கிய தூபேவை, சென்னை அணியும், லக்னோ, பஞ்சாப் அணிகளும் வாங்க போட்டியிட்டனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூபேவை வாங்கியது.
2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்காக விளையாடிய தூபே, 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட இருக்கும் அவர், இது நெடுநாள் கனவு. அனைவருக்கும் நன்றி. விசில் போடு” என தெரிவித்திருந்தார்.
தற்போது அவரது மனைவி அஞ்சும் சென், தனது இன்ஸ்டகிராம் பதிவில் இறுதியாக தோனியின் அணியில் நமது கேப்ஷன் என ஸ்டோரி பகிர்ந்திருக்கிறார்.
தோனியின் அணியில் விளையாட இருப்பதால் தூபேவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது, தற்போது இந்த புகைப்படமும் வைரலாகிவருகிறது.