மாமன்னன் பட நடிகை - காதலுடன் இருக்கும் நெருக்கமான போட்டோ வைரல்!
பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா தனது காதலனுடன் இருக்கும் நெருக்கமான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவீணா
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சாதி அரசியலை, அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைத் தோலுரித்துக் காட்டும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி வெளியானது.இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அதில் பகத் பாசிலுக்கு மனைவி காதபாத்திரத்தில் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா நடித்திருந்தார்.இவர் காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கண்ணா தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ரவீனா டப்பிங் செய்து அசத்தியவர்.
தற்போது வரை, ராக்கி, வீரமே வாகை சூடும், மற்றும் வட்டார வழக்கு போன்ற படங்களில் ரவீனா நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரவீனா தனது காதலன் தேவன் ஜெய்குமாருடன் இருக்கும் போட்டோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் வாலாட்டி படத்தை இயக்கியவர் .
போட்டோ
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது .தற்பொழுது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
முன்னதாக நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக ரவீனா நடிக்கவே நடிகையாக அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது .