அந்த விவாகரத்து நடிகர்தான் என்னோட க்ரஷ்; அவர் என் பக்கத்தில் இருக்கும்போது.. ஓப்பனாக சொன்ன ரவீனா !
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா தனது டப்பிங் அனுவபவம் குறித்து பேசியுள்ளார்.
ரவீனா
ரவீனா திரைப்படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார். சாட்டை, கத்தி, ஐ,வேலையில்லா பட்டதாரி, தெறி போன்ற பல படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

மேலும், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் லவ் டுடே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அண்மையில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு யூடியூப் சானெல் ஒன்றுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அதில் பல நடிகர்களுடன் இவர் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அதுகுறித்து சில வார்த்தைகள் பேச சொன்னனர்.
பேட்டி
அப்போது தனுஷுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்து பேசிய ரவீனா 'தனுஷ் எனது க்ரஷ் லிஸ்டில் உள்ளார். ஐ லவ் தனுஷ் சார். இந்த புகைப்படம் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தின் டப்பிங்கில் போது எடுத்தது. அவருடன் வேலை செய்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2ன் டப்பிங்கில் தனுஷ் சார்தான் என்னுடன் இருந்தார். பவர் பாண்டி படத்தின் போதும் அவர் என்னுடன் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தார். அப்போது எனக்கு டப்பிங் செய்வதா இல்லை அவரை பார்ப்பதா, இல்லை அவர் சொல்வதை கவனமுடன் கேட்டு டப்பிங் செய்வதா என்றே தெரியவில்லை.
பல விஷயங்கள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பொதுவாக டப்பிங் பண்ணும்போது எனக்கு அவ்வளவு பதட்டம் இருக்காது. ஆனால் தனுஷ் சார் பக்கத்தில் இருக்கும்போது டப்பிங்கில் கவனம் செலுத்துவது கஷ்ட்டமாக இருந்தது என்று ரவீனா பேசியுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil