ஐக்கிய அரபு அமீரகங்களில் கட்டுபாடுகளுடன் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகங்களில் வரும் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனையடுத்து அந்நாட்டு அரசு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தொழுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
மசூதிகளில் சிறப்பு தொழுகை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என்றும் மசூதிகளில் தொழுகை முடிந்த பிறகு மசூதிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்,மேலும் 12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவரகள் வீட்டிலே தொழுது கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு தொழுகைக்கு முன்பாக அல்லது பின்பாகவோ மசூதிகளில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நேரப்படி துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தொழுகைகான நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி: காலை 6.02
அல் ஐன்: காலை 5.56
மதினத் சயீத்: காலை 6.07
துபாய்: காலை 5.57
ஷார்ஜா: காலை 5.54
அஜ்மான்: காலை 5.54