இனி நீச்சல் குளத்திற்குள்ளேயே வாழ்க்கையை வாழலாம் - துபாயில் சாதனை!! பிரமாண்ட நீச்சல் குளம் அமைப்பு!
துபாயில் நூலகம், அடுக்குமாடிக் கட்டடங்கள், மிகப்பெரிய தூண்கள் இவை அத்தனையும் நீருக்கடியில் வடிவமைத்து, மிக பிரமாண்ட நீச்சல் குளத்தை கட்டி துபாயில் உலக சாதனையை படைத்துள்ளனர்.

60 மீட்டர் ஆழத்துக்கு மிக பிரமாண்டமான நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீச்சல் குளம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஆழ்கடலுக்குள் நீச்சலுக்குச் செல்லும் நிபுணர்கள், இந்த நீச்சல் குளத்தில் புது வித அனுபவத்தைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.

நீந்தியபடியே சென்று, நீருக்குள் கட்டப்பட்ட கட்டடங்கள், நூலகத்தை பார்வையிட்டு ரசிக்கலாம். ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளத்தை விட ஆறு மடங்கு பெரிய அளவில் இந்த நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர்.

தற்போது ஆழ்கடலுக்குள் செல்லும் பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே இந்த நீச்சல் குளத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள், இந்த பிரமாண்டமான
நீச்சல் குளத்தில் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.