இனி.. யாரும் பசியில் வாடக்கூடாது - இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்!
துபாய் முழுவதும் ஆங்காங்கே இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
துபாய்
ஐக்கிய அரபு அமீரக நகரமான துபாயில், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். கட்டுமான வேலை, உணவு டெலிவரி, கூலித்தொழில் ஆகியவற்றில் கூட

வெளிநாட்டவர் அதிகம் இருப்பதால் துபாயில் சொந்த நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் மக்களின் பசியை போக்குவதற்காக ஒரு மகத்தான திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்தார்.
பசி
அதன்படி பசியால் வாடும் நபர்கள் மற்றும் குடும்பத்துக்கு பணம் சேகரிப்பதற்காக மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக குறைத்துக்கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்காக இலவச ரொட்டி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, துபாயின் முக்கிய இடங்களில் ரொட்டி இயந்திரங்களை பொருத்தியுள்ளார். தானியங்கி முறையில் செயல்படக்கூடிய இந்த இயந்திரத்தில் இருந்து அரபு ரொட்டி மற்றும் பிங்கர் ரோல் ஆகிய இரண்டு வகையான உணவுகள் சூடாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்
அரசு சார்பில் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அதற்கு தனி நபர் நன்கொடையும் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்த திட்டத்துக்கு துபாய் மக்கள் மட்டுமல்லாது உலக மக்கள் பலரும் தங்களது ஆதரவு மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.