கணவரை இன்ஸ்டா மூலம் விவாகரத்து செய்த துபாய் இளவரசி - ராப்பர் பாடகருடன் நிச்சயம்!

Dubai Viral Photos
By Sumathi Aug 29, 2025 01:09 PM GMT
Report

துபாய் இளவரசி, ராப்பர் பாடகரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

துபாய் இளவரசி

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவருடைய குழந்தைகளில் ஷேக்கா மஹ்ராவும் ஒருவர். இவர், ’துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார்.

dubai princess

இவருக்கும் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்வதாக ஷேக்கா அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து ஷேக்கா மஹ்ரா, ராப்பர் பிரெஞ்ச் மொன்டானாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

ராப்பருடன் நிச்சயம்

பிரெஞ்சு மொன்டானாவின் உண்மையான பெயர் கரீம் கார்பூச். உகாண்டா மற்றும் வடஆப்பிரிக்கா முழுவதும் சுகாதாரம் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் பிரபலமானார்.

இவர் முதலில் தொழில்முனைவோர் மற்றும் வடிவமைப்பாளரான நதீன் கார்பூச்சை மணந்துகொண்டார். இவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில், 16 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.