துபாய் புறப்பட்ட இந்திய வீரர்கள்- சூடு பிடிக்கும் ஐபிஎல் களம்

Dubai Indian Cricketers INDvsENG
By Thahir Sep 11, 2021 10:05 AM GMT
Report

இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக துபைக்கு இன்று செல்லவுள்ளார்கள். இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது.

லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

துபாய் புறப்பட்ட இந்திய வீரர்கள்- சூடு பிடிக்கும் ஐபிஎல் களம் | Dubai Indian Cricketers Ind Vs Eng

இந்த டெஸ்ட் நேற்று தொடங்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்திய அணியில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், தொடர்ந்து விளையாட இந்திய வீரர்கள் மறுத்துவிட்டதை அடுத்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலுடன் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த டெஸ்டை வரும் காலத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது 2-1 என முன்னிலையில் இருக்கிறது.

இத்தகைய சூழலில் கடைசி டெஸ்ட் ரத்தாகியுள்ளது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக தனி விமானங்களில் துபாய்க்கு இன்று செல்கிறார்கள்.

துபாய் புறப்பட்ட இந்திய வீரர்கள்- சூடு பிடிக்கும் ஐபிஎல் களம் | Dubai Indian Cricketers Ind Vs Eng

அவரவர் ஐபிஎல் அணிகள் ஏற்பாடு செய்துள்ள தனி விமானங்களில் வீரர்கள் பயணம் செய்யவுள்ளார்கள். துபைக்குச் செல்லும் இந்திய, இங்கிலாந்து வீரர்கள் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகே அவர்களால் பயிற்சியில் பங்கேற்க முடியும்.