துபாயில் மிக பிரமாண்டமான இந்து கோயில் திறப்பு - வைரலாகும் அழகிய வீடியோ

Dubai Viral Video
By Nandhini Oct 05, 2022 08:04 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள அழகிய இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

துபாயில் அழகிய இந்து கோயில் திறப்பு 

துபாயில், ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று மாலை திறந்து வைத்தார்.

இக்கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோவிலை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு, பிரமாண்டமான இந்த இந்து கோவில், பல தசாப்த கால இந்திய கனவை நிறைவேற்றும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. 

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     

dubai-hindu-temple-opening