துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

CM Chennai Return MKStalin மு.க.ஸ்டாலின் சென்னை DubaiExpo முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
By Thahir Mar 29, 2022 02:38 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகம் கொண்டு வருவதற்காக கடந்த 24-ந் தேதி துபாய் சென்றார்.

துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கிணை திறந்து வைத்த அவர் தொடர்ந்து 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அபுதாபி சென்றார்.துபாய்,அபுதாபி பயணம் மூலம் மொத்தம் தமிழகத்திற்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.

நேற்று மாலை அபுதாபியில் நடந்த நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,“துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது,தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்”. மேலும் துபாய் வாழ் தமிழர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.  

You May Like This