துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - BMW காரில் உற்சாக பயணம்..!
சென்னையில் இருந்து அரசு முறை பயணமாக துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்.

துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டிற்கான இந்திய துாதர் அமன் பூரி வரவேற்றார். துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய தூதர் வரவேற்றார்.
தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல்,
தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.
மேலும் புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil