அமீரக அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு : ரூ.3,500 கோடி முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

dmk dubai cmstalin abudhabiminister
By Irumporai Mar 28, 2022 08:27 AM GMT
Report

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை தற்போது சந்தித்துள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டுள்ளார். தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் அபுதாபியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

.இதனிடையே,அமீரக அமைச்சருக்கு “JOURNEY OF CIVILIZATION” என்ற புத்தகத்தை முதல்வர் வழங்கியுள்ளார். இதனையடுத்து,அபுதாபியில் இன்று மாலை வெளிநாடுவாழ் தமிழர்கள் நடத்தக்கூடிய பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,நாளை காலை முதல்வர் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.