”டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளர், அதிமுகவை மீட்போம்” - அமமுக அதிரடி தீர்மானங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அமமுக கழகத் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்கியது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்கவும், அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்க பொதுச்செயலாளர் தினகரனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவை மீட்டெடுக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுக தனித்து போட்டியிடுமா அல்லது அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.