மின் கட்டண உயர்வு; மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் திமுக அரசுக்கு புரிந்திருக்கும் - டிடிவி தினகரன்
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் திமுக அரசுக்கு புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ள மின் பகிர்மான கழகத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும்.
மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 10, 2022
@CMOTamilnadu