தமிழகத்தில் வறண்ட வானிலை; மீனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்!

Tamil nadu TN Weather Puducherry Weather
By Jiyath Feb 28, 2024 09:56 AM GMT
Report

தமிழகத்தில் மார்ச் 5 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வறண்ட வானிலை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும்.

தமிழகத்தில் வறண்ட வானிலை; மீனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்! | Dry Weather In Tamil Nadu Till March 5

பிப்ரவரி 28 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 29 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்ப நிலை 32 - 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

எச்சரிக்கை 

அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

தமிழகத்தில் வறண்ட வானிலை; மீனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்! | Dry Weather In Tamil Nadu Till March 5

தமிழக கடலோரப் பகுதிகளில் பிப்ரவரி 28 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 29 ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.