தாலிபான்களால் பாதாம் விலை தொடர்ந்து உயரும் அபாயம்?
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் உலர் பழங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்தியாவுடனான இறக்குமதி, ஏற்றுமதியை தாலிபான்கள் நிறுத்தியுள்ளதால் உலர் பழங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் 200 லொறிகளில் வந்த உலர் பழங்களின் வருகை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலர் பழ இறக்குமதியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த உலர்பழ வியாபாரி ராஜிந்தர் ஷா தெரிவித்தார்.
மேலும் தாலிபான்கள் காபூலை முற்றுகையிட தொடங்கியதில் இருந்தே பாதாம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது.
அத்தி, உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.250 வரை உயர்ந்து விட்டது.
இந்நிலையில் உலர் பழ வர்த்தகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என ஆப்கானிஸ்தான் வியாபாரிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.