காவல் நிலைத்தில் குடிபோதையில் இளைஞர் ரகளை…பெற்றோரை தாக்கியதால் செருப்பால் அடித்த தந்தை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் பெற்றோரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடி போதையில் இளைஞர் ரகளை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சாலையில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார் அப்போது போவர் வருவோரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரை பின்தொடர்ந்த அந்த இளைஞர் காவல் நிலையத்திலும் ரகளை செய்துள்ளார்.
தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த அந்த இளைஞரின் பெற்றோர் அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அந்த இளைஞர் குடிபோதையில் பெற்றோரையும் தாக்கினார்.
பதிலுக்கு அவரது தந்தை செருப்பால் தாக்கி இழுத்துச் சென்றார். இதனால் காவல் நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.