கொளுத்தும் வெயிலில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் போதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கிய பெண்ணால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மது போதையில் அலப்பறை செய்த பெண்
பொள்ளாச்சி சாலையில் பெண் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு செய்தபடி வரும் வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்து உறங்கினார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின் அவரை சாலையில் இருந்து அழைத்து சென்றனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் கணவர் இறந்த சோகத்தில் மதுவுக்கு அடிமையானதும் தெரியவந்தது.
போக்குவரத்து இடையூறு செய்து சாலையில் படுத்து உறங்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.