குடிபோதையில் நடந்த விபரீதம்: ஒரு குடும்பமே உடல் நசுங்கி பலியான பரிதாபம்
திருப்பூரில் போதையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் அடுத்தடுத்து 2 கார்களின் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகினர். திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது, குறித்த லொறியை இயக்கிய கதிரவன் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி எதிரே வந்த 2 கார்களின் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் காரில் பயணித்த கார்த்திகேயன், அவர் மனைவி சரண்யா, மகள் தனியா பரிதாபமாக பலியாகினர், மற்றொரு காரில் இருந்த மூவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மூவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் லாரி ஓட்டுனர் கதிரவன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.