ஆம்பூரில் குடிபோதையில் 22 வயது இளைஞரை படுகொலை செய்த சிறார்கள்

Murder Ambur Juvenile Crime
By mohanelango Apr 28, 2021 09:35 AM GMT
Report

ஆம்பூர் அருகே மலைக்கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை கண்டுகளித்து விட்டு வீடு திரும்பிய இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் (போதை சிறார்கள்) வழிமறித்து குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சீக்காஜோனை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (22) இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி அர்ச்சனா என்கிற மனைவியும் 9 மாத பெண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் திருமலை அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு பக்கத்து கிராமமான நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவைக் கண்டு களிக்க சென்று இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் வந்த சீக்கஜோனை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (15). சந்தோஷ் குமார் (16) சேட்டு, சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் குடிபோதையில் திருமலையை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம்பூரில் குடிபோதையில் 22 வயது இளைஞரை படுகொலை செய்த சிறார்கள் | Drunk Teens Murder Youngster By Stabbing In Ambur

அப்போது திடீரென போதை சிறார்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து திருமலையின் கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

அப்போது திருமலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராஜ்குமார் மற்றும் சந்தோஷ் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கிராமிய போலீசார் படுகாயமடைந்த ராஜ்குமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதியில் தலைமறைவாக உள்ள சேட்டு சக்திவேல் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே மலைக்கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை கண்டுகளித்து விட்டு வீடு திரும்பிய இளைஞரை போதை சிறார்கள் வழிமறித்து குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது