இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் - பாஜக பிரமுகர் அதிரடி கைது !
சிறுநீர் கழித்த விவகாரம்
மத்திய பிரதேசம் குப்ரி என்ற கிராமத்தில் பர்வேஷ் சுக்லா என்ற நபர் மதுபோதையில் பழங்குடியின இளஞர் ஒருவர் மீது சிறுநீர் கழித்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவர் சிதி பாஜக எம்.எல்.ஏவான கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்று சொல்லப்பட்டது ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் இது மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கவாதத்திற்கு சென்றது.
அதிரடி கைது
இதனை தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பர்வேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.