கார் மீது 22 சக்கர கண்டெய்னர் டிரக் மோதி விபத்து... - சுமார் 3 கி.மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம்..!
மீரட்டில் 22 சக்கர கண்டெய்னர் டிரக் கார் மீது மோதி, பின்னர் சுமார் 3 கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண்டெய்னர் டிரக், கார் மீது மோதி விபத்து
மீரட்டில் 22 சக்கர கண்டெய்னர் டிரக் கார் மீது மோதி, பின்னர் சுமார் 3 கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றது. இந்த கார் லாரியால் தள்ளப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த 4 பேரில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
கார் மீது கண்டெய்னர் மோதியதையடுத்து, கன்டெய்னர் ஓட்டுநரை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் சத்தமிட்ட போதிலும், போதையில் இருந்த வாகன ஓட்டி, காரை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த பிரமாண்ட வாகனத்தை போலீசார் மறித்தபோதுதான் அவர் நிறுத்தியுள்ளார். கண்டெய்னர் டிரக் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஓட்டுனர் சாரதியை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பாரவூர்தியின் சாரதி காரை ஓட்டிச் செல்ல முயற்சித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
