குடிபோதையில் உறங்கிய ஸ்டேஷன் மாஸ்டர்: நடுவழியில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்

ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் குடிபோதையில் உறங்கியதால் டெல்லி - ஹவுரா இடையிலான ரயில் சேவை தாமதமானது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கஞ்சவுசி ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருபவர் பணி நேரத்தில் குடிபோதையில் உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் தவித்தன.

பின்பு ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழப்பத்தை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்துதுணை ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாகவும் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்