பேருந்தை ஓட்ட முயன்ற போதை ஆசாமி; தடுத்து நிறுத்திய ஓட்டுநரின் காதை கடித்து குதறிய கொடூரம் !
குடி போதையில் பேருந்து ஓட்டுனரின் காதை கடித்த போதை ஆசாமி.
காதை கடித்த நபர்
சிவகங்கை பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் குடிபோதையில் ஒருவர் பயணித்துள்ளார். ஓட்டுநர் பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்றதும் குடிபோதையிலிருந்த பயணி பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார்.
இதனால் பயந்து போன மற்ற பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். சத்தத்தைக் கேட்டு பதறியடித்து ஓடிவந்த பேருந்தின் ஓட்டுநர் போதையில் இருந்த நபரை தடுத்து நிறுத்தி கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டுநரின் காதை கடித்துள்ளார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து காயம் அடைந்த ஓட்டுநர் காதை கடித்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் அந்த போதை ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் . இவர் கீழகொம்புக்காரனேந்தலை சேர்ந்த முருகானந்தம் என்று தெரியவந்துள்ளது.