சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் - திடுக்கிடும் பின்னணி

Chennai
By Petchi Avudaiappan Jun 30, 2021 03:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

பிரான்ஸ், நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும் பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்திருந்தது.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் - திடுக்கிடும் பின்னணி | Drugs Smuggling In Chennai Airport

அந்த பார்சலில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்ததால் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் போதை பொருள் மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். 2 பார்சல்களில் இருந்து ரூ. 5. 25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுர்ந்த 105 போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் பார்சலில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.