ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - 3 பேர் கைது
குஜராத்தில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சகோதரர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள தேவபூமி துவாரகா மாவட்டம் சலாயாவில் நேற்று முன்தினம் போதைப்பொருள் பரிமாற்றம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது ரூபாய் 300 கோடி மதிப்புள்ள 17.65 கிலோ ஹெராயின் மற்றும் நரம்பு மண்டலத்தை துாண்டும் 'மெத்தாம்பெட்டமைன்' ஆகியவையுடன் வந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தை சேர்ந்த சஜ்ஜத் கோசி என்பதும், சலாயா நகரில் உள்ள இரு சகோதரர்களிடம் இருந்து போதை பொருட்களை வாங்கிச்செல்ல வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது தகவலின் பேரில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக போதைப்பொருட்களை குஜராத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்யும் சலீம் காரா, அலி காரா சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.